செய்திகள் :

ரூ.73,750 சம்பளத்தில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

post image

மத்திய அரசின் 'ஏ' நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ள முதன்மையான மினிரத்னா நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிரேன் ஆபரேட்டர், பணியாளர் கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து மே 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Crane Operator(Diesel)

காலியிடங்கள்: 6

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக் ஆகிய ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்பட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Staff Car Driver

காலிப்பணியிடங்கள்:1

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பொது அல்லது தனியார் நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.42 சம்பளத்தில் திருச்சி என்ஐடியில் வேலை!

சம்பளம்: மாதம் ரூ. 21,300 முதல் ரூ.73,750 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: 6.5.2025 தேதியின்படி 45, 50-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டாம் கட்ட செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஆண்ட்ரூ யூல் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனமானது 1863 முதல் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தேயிலைத் தோட்டங்கள், பொறியியல் மற்றும் மின் பிரிவுகள் உள்பட பல துறைகளில் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மும்பையில் உள்ள இந்திய அணுசக்திக் கழக (என்பிசிஐஎல்) தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 400 அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்: NPCIL/HQ/H... மேலும் பார்க்க

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாகவுள்ள பல்வேறு பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 01/2025 - Admin (R)ப... மேலும் பார்க்க

ரூ.42 சம்பளத்தில் திருச்சி என்ஐடியில் வேலை!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில்(என்ஐடி) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 12 தேதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. அறி... மேலும் பார்க்க

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை: குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட... மேலும் பார்க்க

ரூ.11 லட்சத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஆண்டுக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 1 ஆம் தேதிக்குள் ஆன்லை... மேலும் பார்க்க