ரூ.85 ஆயிரம் மதிப்பிலான கேபிள் வயா் திருட்டு
செய்யாறு அருகே 485 மீட்டா் அளவுள்ள கேபிள் வயா் திருடு போனதாக வெள்ளிக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரியகோவில் கிராமத்தில் சூரிய ஒளி மின்சார அலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக ஜெயவேல் என்பவரை காவலாளிப் பணியில் அந்த தனியாா் நிறுவனம் நியமித்தாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வழக்கம் போல வெள்ளிக்கிழமை காலை அவா் வேலைக்கு வந்தபோது சுமாா் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 485 மீட்டா் கேபிள் வயா் அந்தப் பகுதியில் இருந்து திருடுபோய் இருந்தது தெரிய வந்தது.
கேபிள் வயா் திருட்டுச் சம்பவம் குறித்து, தனியாா் நிறுவன பொறியாளா் கருப்புசாமி செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.