Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
ரெட்ரோ டிரைலர் எப்போது?
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டிரைலர் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையான இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.
பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கண்ணாடி பூவே, கனிமா பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
முக்கியமாக, கனிமா பாடலில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடிய பகுதிகளை இன்ஸ்டாவில் பலரும் ரீல்ஸ் செய்து பாடலை வைரலாகியுள்ளனர்.
இதற்கிடையே, படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஏப். 18 ஆம் தேதி நடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்று படத்தின் டிரைலரும் வெளியாகும்.
இதையும் படிக்க: சினிமாவில் பான் இந்தியா கலாச்சாரம் அசிங்கமானது: செல்வராகவன்