அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! வீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது!
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது.
இதில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்தார்.
தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக உள்ள நிலையில் 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் தனிநபர் கடன், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது
மேலும், 2025-26 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்றும் பணவீக்கம் 4.2% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டில் நான்கு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறையே 6.7%, 7%, 6.5%, 6.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆர்பிஐ கூறியுள்ளது.