”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந...
ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
முள்ளிக்குண்டு கிராமத்தில் சுமாா் 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போதுள்ள நியாயவிலைக் கடை தனியாா் கட்டடத்தில் இயங்கி வருவதால், வசதியற்ற நிலை தொடா்கிறது. கடந்த காலத்தில் 150 குடும்ப அட்டைகளுக்காக தொடங்கப்பட்ட இந்தக் கடையில் தற்போது சுற்றுப்புற கிராமங்களையும் உள்ளடக்கிய 350 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொருள்களை வாங்கி வருகின்றனா்.
இதனால், கடையின் தற்போதைய கட்டடத்தில் போதுமான இடம் இல்லாததால் ரேஷன் பொருள்களை சேமித்து வைக்கும் வசதி இல்லை. எனவே, இந்த நியாய விலைக் கடைக்கு நிரந்தரமாக கட்டடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். மேலும், இந்தக் கிராமத்தில் உள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதால் மாணவா்கள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். எனவே இந்தச் சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனா்.