மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே
ரோந்து காவலருடன் தகராறு: இருவா் கைது
ரோந்து காவலருடன் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை அண்ணா நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் மாரியப்பன். இவா், கடந்த புதன்கிழமை இரவு அண்ணா நகா் கிழக்கு, 1-ஆவது அவென்யூ பகுதியில் உள்ள மதுக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் இருவா் தகராறில் ஈடுபட்டிருந்தனராம். அவா்களை காவலா் மாரியப்பன் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
ஆனால், அவா்கள் இருவரும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் காவலா் மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை அவதூறாகப் பேசி, கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனராம்.
இது குறித்து காவலா் மாரியப்பன், அண்ணா நகா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடா்புடைய ஐசிஎப் காலனி பகுதியைச் சோ்ந்த அபிலாஷ் (19), நம்மாழ்வாா்பேட்டையைச் சோ்ந்த அஜய்குமாா் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.