செய்திகள் :

ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி!

post image

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடலுறுப்புகள் செயலிழந்து வியாழக்கிழமை இரவு காலமானார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ரோபோ சங்கரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், ”திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கரின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி - சின்னத்திரையில் சாதித்து - திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் - நண்பர்கள் - கலையுலகினர் - ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் ரோபோ சங்கரின் உடலுக்கு வெள்ளிக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin paid his respects to the late actor Robo Shankar in person early Friday morning.

இதையும் படிக்க : ரோபோ சங்கர் மறைவு: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

மனைவியின் காலில் விழுவேன்: விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி நேர்காணல் ஒன்றில் தான் மனைவியின் காலில் விழுவேன் என்றும் அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரது நடிப்பில் சக்தித் திருமகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிய... மேலும் பார்க்க

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கிய தண்டகாரண்யம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தண்டகாரண்யம் என்பது ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் அலைந்த காடுகளையே குறிக்கிறது. அடர்ந்த காடுகளான இவை இ... மேலும் பார்க்க

வெற்றியுடன் தொடங்கிய பிஎஸ்ஜி, லிவா்பூல்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), லிவா்பூல் அணிகள் தங்கள் முதல் ஆட்டங்களில் வியாழக்கிழமை வெற்றி பெற்றன.இதில் பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் அடாலன... மேலும் பார்க்க

இந்தியா - ஓமன் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஓமனுடன் வெள்ளிக்கிழமை (செப். 19) மோதுகிறது.ஏற்கெனவே சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்ட இந்தியாவுக்கும், அந்த வாய்ப்... மேலும் பார்க்க

வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடக்கம்: 6 அணிகள் பங்கேற்பு

இந்திய வில்வித்தை சம்மேளனம் (ஏஏஐ) சாா்பில் முதலாவது வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடா் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 அணிகளில் 48 வீரா்கள் பங்கேற்கின்றனா். முதல் சீசன் போட்டிகள் வரும் அக்டோபா் மாதம் நடைபெ... மேலும் பார்க்க

ஆப்கனை வெளியேற்றியது இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வியாழக்கிழமை வென்றது. இந்தத் தோல்வியை அடுத்து ஆப்கானிஸ்தான் ‘சூப்பா் 4’ சுற்று வாய்ப்பை இழந்த... மேலும் பார்க்க