ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பா...
ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்
ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருப்பதே இந்திய அளவில் இன்றைய முன்னணி தலைப்புச் செய்திகளில் ஒன்றாக வலம் வருகிரது.
அவர் எஅப்படி என்ன சொன்னார்? :- “ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைத்தாக வேண்டும். இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத ‘ஈர்ப்புத்திறன் குறைந்த ஒரு கேப்டன் ரோஹித்’” என்று கருத்து தெரிவித்துள்ளார் ஷாமா முகமது.
இதனையடுத்து, ஷாமாவின் கருத்துகளுக்கு கண்டனங்கள் எழத் தொடங்கிவிட்டன. இது குறித்து, பாரதீய ஜனதா கட்சி தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதீப் பந்தாரி கூறியிருப்பதாவது, “காங்கிரஸை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது! இப்போது காங்கிரஸார் இந்திய கிரிக்கெட் கேப்டனை குறிவைத்து தாக்கி பேசி வருகிறார்கள்.
காங்கிரஸார் என்ன நினைக்கிறார்கள்? அரசியலில் தோல்வியடைந்துள்ள ராகுல் காந்தி இப்போது கிரிக்கெட் விளையாட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, தான் ரோஹித் சர்மா குறித்து பதிவிட்டிருந்தவற்றை சமூகவலைதளங்களிருந்து நீக்கிவிட்டார் ஷாமா முகமது.