லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல்; நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்!
ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலை துறை வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு ஒப்பந்தகாரர்களிடம் இருந்து லஞ்சமாக பணம் பெறுவதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மாலை ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின. அதில் ரூ. 5லட்சத்து 60 ஆயிரம் இருந்துள்ளது.

அவற்றை கைபற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸார், இந்த பணம் குறித்து உதவி கோட்ட பொறியாளரான மதுரையைச் சேர்ந்த ரெங்கபாண்டியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த பணம் கணக்கில் வராதது என தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், உதவி கோட்ட பொறியாளர் மற்றும் ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
