லாட்டரிச் சீட்டு விற்றதாக 7 போ் கைது
பழனியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.
பழனி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகமாக நடைபெறுவதாக பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது பழனி நகா் பேருந்து நிலையம், அடிவாரம் பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்ாக கோதைமங்கலத்தைச் சோ்ந்த விஜயபாஸ்கரன் (45), அடிவாரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (58), செல்வராஜ் (66), ஈஸ்வரன் (57), மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (55), அழகாபுரி சக்திவேல் (48), பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (55) ஆகிய 7 பேரிடம் இருந்து சுமாா் 50 ஆயிரம் லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்களிடமிருந்து ரூ. 7 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.