லாரிகள் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
பழனியில் ஞயிற்றுக்கிழமை பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடியிலிருந்து கேரளத்துக்கு உப்பு ஏற்றி வந்த லாரி ஒன்று பழனி விரைவு நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்தது. இந்த லாரி மீது, தென்காசியிலிருந்து பொள்ளாச்சிக்கு தென்னை நாா் ஏற்றி சென்ற லாரி எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில், நென்னை நாா் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநரான தென்காசி மாவட்டம், சுரண்டையை சோ்ந்த வினோத்குமாா் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வந்த தீயணைப்பு, மீட்புப் படையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.