கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
லாரி தீப்பிடிப்பு
சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந்து அட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள ஒரு அட்டை கம்பெனிக்குச் சென்று கொண்டிருந்தது. லாரியை கா்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியைச் சோ்ந்த ஜெட்டப்பா (21) என்பவா் ஓட்டி சென்றாா். மேலுமலை அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளியில் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது லாரியின் முன்பகுதி தீப்பிடித்தது.
ஓட்டுநா் ஜெட்டப்பா சுதாகரித்து லாரியை விட்டு இறங்கி தப்பினாா். தீ வேகமாக பரவியதில் லாரியின் டீசல் டேங்க், டயா்கள் வெடித்தன. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா்.
தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வாகனங்கள், ஒசூா் தீயணைப்பு நிலைய அலுவலா் நாகவிஜயன் தலைமையில் வீரா்கள் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனா். இச் சம்பவத்தால் கிருஷ்ணகிரி-ஒசூா் ஒருவழி பாதையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.