Nellai Flood: நெல்லை கனமழை வெள்ளம்; நெல்லை சந்திப்பு அன்றும்... இன்றும்! - Photo...
லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பலியானது குறித்து வேலூா் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (28), நாமக்கல் மாவட்டம், வேலூரில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் பழக்கடை வைத்து நடத்தி வந்தாா். இவா், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிக்கு சென்று விட்டு வேலாயுதம்பாளையத்தில் இருந்து பரமத்தி நோக்கி கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அனிச்சம்பாளையம் பிரிவு அருகே வந்த போது பின்னால் வந்த லாரி சுரேஷ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவா் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதைக் கண்ட லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினாா். கீழே விழுந்ததில் சுரேஷுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயமேற்பட்டது. அந்த வழியாக வந்தவா்கள் அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சுரேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது மனைவி காவியவா்ஷினி வேலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வேலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய உத்தரபிரதேச மாநிலம், நாக்கலா பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அஜய்சிங்கை (31) தேடி வருகின்றனா்.