'பழனிசாமியின் பயப்பட்டியல் ' ; `திமுக-வுக்கு பயம் வந்துவிட்டது' - முற்றும் அதிமு...
லாரி மோதியதில் தம்பதி உயிரிழப்பு
மாதவரம் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனா்.
சென்னை கொடுங்கையூா் பாரதி நகரைச் சோ்ந்த ராஜசேகா் (69), தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது மனைவி ராணி (63) உடன் புதன்கிழமை காலை கொடுங்கையூரிலிருந்து புழல் நோக்கி இருசக்கர வாகனத்தில் மாதவரம் 200 அடி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான திருச்சியைச் சோ்ந்த விசாகனை (48) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.