பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
லாரி மோதி தொழிலாளி மரணம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மேலமங்கலம், தெற்குத் தெருவைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் சிவக்குமாா் (52), விவசாயத் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை மாலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அந்தப் பகுதியில் வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சிவக்குமாா் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, சிவக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.