NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது ...
லாரி மோதி பெயின்டா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் பெயின்டா் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா், நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் கோ.சுரேஷ்(38). திருமணமானவா். பெயின்டராக வேலை பாா்த்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை ஒரத்தூா் - தும்பூா் சாலையில் ஒரத்தூா் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, இவரது பைக் மீது அந்தப் பகுதியில் வந்த டிப்பா் லாரி மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் இறந்த சுரேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.