செய்திகள் :

லா லீகா தொடர்: எம்பாப்பே 2 கோல்கள், ரியல் மாட்ரிட் முதலிடம்!

post image

லா லீகா கால்பந்து தொடரில் வில்லார்ரியல் அணியுடன் மோதிய ரியல் மாட்ரிட் அணி 2-1 என வென்றது.

வில்லார்ரியல் அணியின் வீரர் ஜுவான் போய்த் 7ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தார்.

2 கோல்கள் அடித்த எம்பாப்பே

அடுத்ததாக ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிளியன் எம்பாப்பே 17, 23ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.

பின்னர் இரு அணியும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றன. முதல் பாதி முடிவில் 2-1 என ரியல் மாட்ரிட் முன்னிலை வகித்தது.

சமமான இரண்டாம் பாதி

பின்னர் இரண்டாம் பாதியில் இரு அணிகள் எவ்வளவு முயற்சித்தும் ஒரு கோல்கூட அடிக்கவில்லை.

இரு அணிகளும் சிறப்பாகவே பந்தினை பாஸ் செய்தது. வில்லார்ரியல் அணிக்கு 11 கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் வீணடித்தன.

இந்தப் போட்டியில் 55 சதவிகிதம் பந்தினை ரியல் மாட்ரிட் அணியே வைத்திருந்தது.

புள்ளிப் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணி 60 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

லா லீகா தொடரின் புள்ளிப் பட்டியல்

1. ரியல் மாட்ரிட் - 28 போட்டிகள் - 60 புள்ளிகள்

2. பார்சிலோனா - 26 போட்டிகள் - 57 புள்ளிகள்

3. அத்லெடிகோ மாட்ரிட் - 27 போட்டிகள் - 56 புள்ளிகள்

4. அத்லெடிகோ கிளப் - 27 போட்டிகள் - 49 புள்ளிகள்

5. வில்லார்ரியல் அணி - 27 போட்டிகள் - 44 புள்ளிகள்

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி: பிரதமர் மோடி

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.இதை... மேலும் பார்க்க

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ரா... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸின் கேப்டன் அக்‌ஷர் படேல் குறித்து மனம் திறந்த அபிஷேக் போரெல்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அபிஷேக் போரெல் பேசியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ரஞ்சி தொடரில் விதர்பா அண... மேலும் பார்க்க

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் த... மேலும் பார்க்க

இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோலி பதில்!

இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரா... மேலும் பார்க்க