செய்திகள் :

லிவ் இன் உறவு, கார்கள், ஆடம்பர வாழ்க்கை: போதைப்பொருளுடன் பிடிபட்ட பஞ்சாப் பெண் கான்ஸ்டபிள் டிஸ்மிஸ்!

post image

பஞ்சாப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதையடுத்து பஞ்சாப் அரசு முதற்கட்டமாக போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. சண்டிகரை சேர்ந்த அமன்தீப் கவுர் என்ற பெண் கான்ஸ்டபிள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்வதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சண்டிகர் பாதல் மேம்பாலத்திற்கு கீழே அமன்தீப் கார் வருகைக்காக காத்திருந்தார். மகேந்திரா தார் கார் அந்த வழியாக வந்தது. அக்காரை மடக்கிய போது காரை அமன்தீப் ஓட்டி வந்தார். அவருடன் ஜஸ்வந்த் என்பவர் இருந்தார். காரை சோதனை செய்து பார்த்தபோது உள்ளே 17.71 கிராம் ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமன்தீப் கவுர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு அவர் உடனடியாக போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அமன்தீப் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம் ஆகும். எப்போதும் தனது தார் காருடன் வலம் வரும் கவுர், அக்காருடன் பஞ்சாப் பாடல்களை பாடி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிடுவது வழக்கம். அதுவும் போலீஸ் சீருடையுடன் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். விலை உயர்ந்த கைக்கடிகாரம், ஐபோனுடன் எப்போதும் வலம் வரும் கவுருக்கு இன்ஸ்டாகிராமில் 37 ஆயிரம் பாலோவர்கள் இருக்கின்றனர். இதனால் அவரை இன்ஸ்டாகிராம் ராணி என்று எல்லோரும் அழைப்பதுண்டு.

படுகொலை செய்யப்பட்ட சித்து மூஸ்வாலாவின் வீடியோவை வெளியிட்டு அவரது படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் கவுர் பதிவிட்டு இருந்தார். கவுர் எப்போதும் ஆடம்பரமாக வாழக்கூடியவர் ஆவார். அவர் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, ஆடம்பர கார்கள், லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் போன்றவை வைத்திருப்பதாக குர்மீத் கவுர் என்ற பெண் பேஸ்புக்கில் குற்றம்சாட்டி இருக்கிறார். ஆம்புலன்ஸ் டிரைவர் பல்விந்தர் சிங் என்பவருடன் லிவ் இன் உறவில் அமன்தீப் வாழ்வதாகவும் குர்மீத் கவுர் தெரிவித்துள்ளார். மேலும் பல்விந்தர் சிங்கும், அமன்தீப் கவுரும் சேர்ந்து ஆம்புலன்ஸில் போதைப்பொருள் வியாபாரம் பார்ப்பதாகவும், அது குறித்து போலீஸில் புகார் செய்தபோது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குர்மீத் கவுர் தெரிவித்துள்ளார். கவுருக்கு எங்கிருந்து போதைப்பொருள் கிடைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Vikatan Weekly Quiz: `வக்ஃப் மசோதா டு ட்ரெண்டிங் ஜிப்லி ஆர்ட்' - இந்த வார ஆட்டத்துக்குத் தயாரா!?

வக்ஃப் திருத்த மசோதா 2025 நிறைவேற்றம், ட்ரெண்டிங் ஜிப்லி ஆர்ட், ஐபிஎல், கார்ல் மார்க்ஸுக்கு சிலை வைப்பதாக அறிவிப்பு என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் we... மேலும் பார்க்க

Devyn Aiken: அமெரிக்க Influencer வாழ்க்கையை மாற்றிய மூக்கு அறுவை சிகிச்சை; யார் இந்த வைரல் பெண்?

உருவ கேலி என்பது உலகம் முழுவதுமே இருக்கிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரில் வசித்து வரும் 30 வயதான டெவின் ஐகெனும் (Devyn Aiken) இதற்குத் தப்பவில்லை.இவருக்கு நடந்த உரு... மேலும் பார்க்க

‘மீட்பர்’ ஆனந்த் அம்பானியால் ‘காப்பாற்றப்பட்ட’ பிராய்லர் கோழிகள் இப்போது எங்கே?

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி பிராய்லர் கோழிகளை சாவிலிருந்து ‘மீட்ட’ சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிரிபுதிரி ஹாட் டாபிக்.தனது 30-வது பிறந்தநாளை முன்னி... மேலும் பார்க்க