செய்திகள் :

லுங்கி என்கிடிக்கு மாற்றாக ஜிம்பாப்வே வீரரை களமிறக்கும் பெங்களூரு அணி!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளார் லுங்கி என்கிடிக்கு பதிலாக ஜிம்பாப்வே வீரர் பிலெஸ்ஸிங் முசரபனி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் லுங்கி என்கிடி, தென்னாப்பிரிக்கா அணியுடன் பயிற்சியில் இணையவுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இதனிடையே, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் நடைபெறவிருக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பிளே ஆஃப் சுற்றுகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி வருகின்ற மே 26 ஆம் தேதி தாயகம் திரும்ப இருப்பதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவருக்கு மாற்றாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிலெஸ்ஸிங் முசரபனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்காக 70 டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை ரூ. 75 லட்சத்துக்கு பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையும் படிக்க : டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு!

லக்னௌ பேட்டிங்; பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்த ஷுப்மன் கில்!

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் டி20 போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட... மேலும் பார்க்க

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மூன்று அணிகள்; 4-வது இடம் யாருக்கு?

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதிபெற்றுவிட்ட நிலையில், 4-வது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ்... மேலும் பார்க்க

டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர்ப் பத... மேலும் பார்க்க

அடித்து நொறுக்கிய சாய் சுதர்சன் - ஷுப்மன் கில்! அபார வெற்றியுடன் பிளே ஆஃபில் குஜராத்!

ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலமாக குஜராத் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றது... மேலும் பார்க்க