செய்திகள் :

வகுப்பறை மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயம்; திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி அதிர்ச்சி

post image

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சேகல் ஊராட்சி தீவம்பாள்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 2022-23 ல் சுமார் 33,00,000 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தீவம்பாள்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 88 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், வகுப்பறையில் அமர்ந்திருந்த நிலையில், கட்டட மேற்கூரையின் சிமென்ட் பூச்சு காரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் வகுப்பறையில் அமர்திருந்த மாணவன் தேசிகன் (வயது 10) தலையில் விழுந்துள்ளது. இதனால் அவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கவியரசன் , கனிஸ்கர், சந்திரமோகன் ஆகிய மூன்று பேர் லேசான காயம் அடைந்தனர்.

காயமடைந்த அனைவரையும் அருகிலுள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தேசிகன் என்கிற மாணவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை முதன்மை அலுவலர் இரா.சௌந்தர்ராஜனை (பொறுப்பு) தொடர்பு கொண்டு விசாரித்தபோது, சரியான விளக்கம் தராமல் நமது அழைப்பை துண்டித்தார்!

பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்ய... மேலும் பார்க்க

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க