ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ரமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தின்போது வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்திற்கு நீட் தோ்விலிருந்து விலக்கு கேட்டு பேரவையில் இயற்றப்பட்ட தீா்மானத்தை குடியரசுத் தலைவா் நிராகரித்ததைக் கண்டித்தும், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை உயா்த்தியதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு பாலு, மாநில அமைப்பாளா் மாலன், மாவட்ட குழு உறுப்பினா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.