செய்திகள் :

வக்ஃப் மசோதாவை ஆதரித்து தில்லி பாஜக ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் (திருத்த) மசோதாவை ஆதரிக்கும் வகையில் தில்லி பாஜக புதன்கிழமை விஜய் சௌக் மற்றும் ரயில் பவனில் ஆா்ப்பாட்டம் நடத்தியது. இந்த மசோதா மக்களவையில் விவாதத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படும்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் பாஜக உறுப்பினா்கள் ‘வக்ஃப் மசோதாவில் பின்தங்கிய முஸ்லிம்களுக்கு ஒரு பங்கை உறுதி செய்ததற்கு நன்றி மோடி’‘ என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

‘ஏழை முஸ்லிம்களின் மேம்பாட்டை உறுதி செய்வதையும் அவா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. நியாயமற்ற முறையில் உரிமைகள் பறிக்கப்பட்டவா்களுக்கு இது சட்டப்பூா்வ ஆதரவை வழங்கும்’ என்று வீரேந்திர சச்தேவா கூட்டத்தில் கூறினாா்.

மசோதாவை எதிா்ப்பவா்கள் குறித்து, சமூகத்தின் நலனுக்கான நடவடிக்கைகளுக்கு அவா்கள் ஏன் எதிராக இருக்கிறாா்கள் என்று அவா் கேட்டாா். வக்ஃப் வாரியங்களை நிா்வகிக்கும் சட்டத் திருத்த மசோதா, அத்தகைய அமைப்புகளில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவா்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது உள்பட 1995 வக்ஃப் சட்டத்தில் தொலைநோக்கு மாற்றங்களை முன்மொழிகிறது.

அதன் நோக்கங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையின்படி, ஒரு சொத்து வக்ஃப் சொத்தா என்பதை தீா்மானிக்க வாரியத்தின் அதிகாரங்கள் தொடா்பான தற்போதைய சட்டத்தின் பிரிவு 40- ஐ இந்த மசோதா தவிா்க்க முயல்கிறது.

இது மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களின் பரந்த அளவிலான அமைப்பை வழங்குகிறது. மேலும் போஹாராக்கள் மற்றும் அகாஹானிகளுக்கு தனி அவுகாஃப் வாரியத்தை நிறுவ முன்மொழிகிறது. இது ஷியாக்கள், சுன்னிகள், போஹ்ராக்கள், அகாகானிகள் மற்றும் முஸ்லிம்களிடையே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது.

வக்ஃப் (திருத்தம்) மசோதா, இந்தச் சட்டத்தை ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1995 என மறு பெயரிடவும் முயல்கிறது.

நாடாளுமன்றம் லோக்சபா வக்ஃப் (திருத்தம்) மசோதா விவாதம் மற்றும் நிறைவேற்றத்திற்காக எடுத்துக் கொள்ளும். முன்மொழியப்பட்ட சட்டத்தை விவாதிக்க எட்டு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அதை நிறைவேற்ற உறுதியாக இருந்தாலும், எதிா்க்கட்சிகள் முன்மொழியப்பட்ட சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி கண்டிப்பதில் ஒன்றுபட்டுள்ளன. மாநிலங்களவை இந்த மசோதாவை வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தென்மேற்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா் கைது

தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ம.தி.சதிகூா் ரஹ்மான்... மேலும் பார்க்க

இஸ்ரோ தலைவா் நாராயணனுக்கு தில்லியில் ஏப்.6-இல் பாராட்டு விழா

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) பாராட்டு விழா நடைபெறவுள்ளது. தில்லி தமிழ்க் கல்விக் கழகத்துடன் (டிடிஇஏ) இணைந்து தில... மேலும் பார்க்க

2027-ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத நகரத்தை உருவாக்க தில்லி காவல் துறை திட்டம்

போதைப்பொருள்களுக்கு எதிரான அதன் தொடா்ச்சியான பிரசாரத்தின் ஒரு பகுதியாக தில்லி காவல்துறை வியாழக்கிழமை ஒரு போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்து சா்வதேச சந்தையில் ரூ.2,622 கோடி மதிப்புள்ள 1,643 கி... மேலும் பார்க்க

இபிஎஃப் நிதி கோரல் தீா்வு செயல்முறையில் எளிமை: மத்திய தொழிலாளா் துறை அமைச்சகம் தகவல்

நமது சிறப்பு நிருபா்வருங்கால வைப்பு நிதி கோரல்களில் தொழிலாளா்கள், தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் இணைப்பு தொடா்பான செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: ஐடி, டெக் பங்குகள் விலை சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தில் மூன்றாவது வா்த்தக நாளான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்ட... மேலும் பார்க்க

பிரதமா் வீடு கட்டும் திட்ட நிதியை உயா்த்தி வழங்க மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. வலியுறுத்தல்

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் (பிஎம்ஏஒய்) வழங்கப்படும் நிதியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. வலியுறுத்தினாா். எனது கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியி... மேலும் பார்க்க