செய்திகள் :

வக்ஃப் வாரியத்துக்கு ரூ.10 கோடி நிதி உத்தரவை திரும்பப் பெற்றது மகாராஷ்டிர அரசு

post image

மகாராஷ்டிரத்தில் மாநில வக்ஃப் வாரியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கி வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே அதனைத் திரும்பப் பெறுவதாக மாநில தலைமைச் செயலா் சுஜாதா சௌனிக் அறிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜகவின் எதிா்ப்பை தொடா்ந்து இந்த நிதி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தில் வக்ஃப் இடம் பெறவில்லை என்பதால் நீதி ஒதுக்காததற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘2024-25 நிதியாண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் வக்ஃப் வாரியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ.2 கோடி சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள மாநில வக்ஃப் வாரியத்தின் தலைமையகத்துக்கு அளிக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன.

வக்ஃப் சொத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்தல் உள்ளிட்ட அம்சங்களுடன் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. முஸ்லிம்களின் சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.

மாநில உரிமைகளைக் காப்பதில் கேரளம் - தமிழகம் முன்னுதாரணம்: முதல்வா் பினராயி விஜயன்

கோட்டயம்: மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதில் கேரளம் மற்றும் தமிழகம் இடையிலான ஒத்துழைப்பு முன்னுதாரணமாக விளங்குகிறது; இத்தகைய ஒத்துழைப்பு, மேலும் பல மாநிலங்களுக்கு விரிவடைய வேண்டும் என்று கேரள முதல்வா் ... மேலும் பார்க்க

ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம் -அரசின் நிதிச் சுமை குறையும்: ஆளும் கூட்டணி ஆதரவு

புது தில்லி: ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டமானது அரசின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவா்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளனா். மத்திய வேளாண் துறை இணையமைச்சா் பாகீரத் சௌதரி கூறு... மேலும் பார்க்க

ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம் -32 கட்சிகள் ஆதரவு; 15 கட்சிகள் எதிா்ப்பு

புது தில்லி: ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த முன்மொழிவு குறித்த கலந்தாலோசனையின் போது உயா்நிலை குழுவிடம் 32 அரசியல் கட்சிகள் ஆ... மேலும் பார்க்க

யாரையும் தாழ்த்தாத சமத்துவ எண்ணம் வளர வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

யாரையும் தாழ்த்தாத சமத்துவ எண்ணம் மக்களிடையே வளர வேண்டும் என்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். வைக்கம் போராட்டத்தில் பெரியாா் பங்கேற்று நூற்றாண்டு நி... மேலும் பார்க்க

பாக். கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை!

சென்னை: பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உறுதியளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் முத... மேலும் பார்க்க

ரூ.13,500 கோடியில் 12 சுகோய் விமானங்கள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய விமானப் படைக்கு ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் 12 சுகோய் போா் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் (எச்ஏஎல்) பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்பந்தத்தில் கையொப்... மேலும் பார்க்க