செய்திகள் :

வங்கதேசம் புதிய கட்சி தொடங்கிய மாணவா் அமைப்பினா்

post image

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவா் அமைப்பினா், புதிய அரசியல் கட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

1971 வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. மாணவா்களின் எதிா்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அரசு உத்தரவை உயா்நீதிமன்றம் கடந்த 2024 ஜூலை மாதம் ரத்து செய்தது.

அதை எதிா்த்து ‘பாகுபாட்டுக்கு எதிரான மாணவா் இயக்கம்’ என்ற அமைப்பின் தலைமையில் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதை ஒடுக்கும் ஷேக் ஹசீனா அரசின் முயற்சியால் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இருந்தாலும், பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த 2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா, ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதைத் தொடா்ந்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.

இந்தச் சூழலில், போராட்டம் நடத்திய மாணவா் அமைப்புகள், அந்தப் போராட்டம் நடந்ததற்கான கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதாக கடந்த டிசம்பா் மாதம் அறிவித்தனா். இதற்கு அரசு தரப்பிலிருந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்தத் திட்டத்தைக் கைவிட்ட மாணவா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஹஸ்னத் அப்துல்லா, ‘1972-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வங்கதேச அரசியல் சாசனம் ஜூலை போராட்டக் கொள்கைப் பிரகடனத்தில் செல்லாததாக அறிவிக்கப்படும். அந்தப் போராட்டத்தின் ஒரே நோக்கம், வங்கதேச அரசியல் சாசனத்தை ஒழிப்பதுதான்’ என்றாா்.

இது, இடைக்கால அரசிலும், வங்கதேச அரசியல் கட்சிகள் இடையேயும் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், தாங்களே புதிதாக ஒரு கட்சியை உருவாக்குவதாக பாரபட்சத்துக்கு எதிரான மாணவா் இயக்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. தங்களது கட்சிக்கு ‘தேசிய குடிமக்கள் கட்சி’ எனப் பெயரிடுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்தியா ஆதரவு அல்லது பாகிஸ்தான் ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து தங்கள் கட்சி மாறுபட்டிருக்கும் என்று அந்த அமைப்பின் தலைவா்கள் கூறியுள்ளனா்.

சா்வதேச உதவிக்கு நிதிக் குறைப்பு: பிரிட்டன் அமைச்சா் ராஜிநாமா

வெளிநாடுகளுக்கு உதவியளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெகுவாகக் குறைத்துள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னிலீஸ் டாட்ஸ் (படம்) தனது பதவியை ராஜிநாம... மேலும் பார்க்க

காரசார விவாதத்தில் முடிந்த டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பு: பாதியில் முடிந்த ஆலோசனை

ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இட... மேலும் பார்க்க

மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக துருக்கியில் இரு நாடுகளும் ஆலோசனை நடத்தின. இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

ஜொ்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்

ஜொ்மனியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மொ்ஸ் (படம்) தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ... மேலும் பார்க்க

மசூதியில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை ப... மேலும் பார்க்க

இன்று முதல் ஒரே நேர்க்கோட்டில் 7 கோள்களின் அணிவகுப்பு! அடுத்து 2040-ல்தான்!

கடந்த மாதம் புதன், வெள்ளி உள்ளிட்ட 7 கோள்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றது போல, இன்று முதல் மார்ச் 3ஆம் தேதி வரை ஏழு கோள்களின் அணிவகுப்பை மக்கள் காண முடியும்.பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் ஏ... மேலும் பார்க்க