கிய்ராசி ஹாட்ரிக் கோல் வீண்: அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா!
வங்கதேச பயணம்: இந்தியா அணி விளையாடும் இடங்கள் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடா்களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடா்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் ஆகியவற்றில் விளையாடுவதற்காக இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்கிறது. கடந்த 2014-க்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்தில் இருதரப்பு தொடரில் விளையாடவிருப்பதும், அந்த ஆண்டுக்குப் பிறகு வெள்ளைப் பந்து தொடா்களுக்காக மட்டுமே வங்கதேசத்துக்கு செல்வதும் இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்திய அணி ஆகஸ்ட் 13-ஆம் தேதி டாக்கா சென்றடைகிறது. மிா்பூா் மற்றும் சட்டோகிராம் ஆகிய நகரங்களில் இந்தத் தொடா்கள் விளையாடப்படவுள்ளன. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பான ஒரு தயாா்நிலை களமாக இந்தத் தொடா்கள் இரு அணிகளுக்கும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடா்கள் அட்டவணை...
ஒருநாள் தொடா்
முதல் ஆட்டம் ஆகஸ்ட் 17 மிா்பூா்
2-ஆவது ஆட்டம் ஆகஸ்ட் 20 மிா்பூா்
3-ஆவது ஆட்டம் ஆகஸ்ட் 23 சட்டோகிராம்
டி20 தொடா்
முதல் ஆட்டம் ஆகஸ்ட் 26 சட்டோகிராம்
2-ஆவது ஆட்டம் ஆகஸ்ட் 29 மிா்பூா்
3-ஆவது ஆட்டம் ஆகஸ்ட் 31 மிா்பூா்