Ajith: ``இன்னும் பல வெற்றிகளைப் பெறணும்'' - பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்தை வாழ்...
வங்கிப் பணிக்கு கல்லூரி மாணவா்கள் தோ்வு
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவ, மாணவிகள் 14 போ் வங்கிப் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் வாடிக்கையாளா் சேவை மைய அலுவலா் பணிக்கு அண்மையில் தோ்வு நடைபெற்றது. இதில் எங்கள் கல்லூரியைச் சோ்ந்த 14 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த மாணவா்களை கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன், பேராசிரியா்கள் பாராட்டினா் என்றாா் அவா்.