Ajith Kumar: பாலக்காடு பகவதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் - Family க்ளிக்...
வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உடனே பேசி வட்டியைக் குறைக்கலாம்! - எப்படி தெரியுமா?
இனி நீங்கள் கடன் வாங்கியிருக்கும் வங்கியிடம் பேசி, வட்டி விகிதத்தைக் குறைக்கலாம்.
இது கொஞ்சம் ஆச்சரியமான செய்தியாக இருக்கலாம். இதுகுறித்து தெளிவாக விளக்குகிறார் நிதி நிபுணர் விஷ்ணுவர்தன்.
"இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு வங்கியும் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தைக் பொறுத்தே, தங்களது வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தால் வங்கிகளும் வரி விகிதத்தைக் குறைக்கும். காரணம், இப்போது வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் வாங்கியிருக்கும் கடன்களுக்கு குறைந்த வட்டியே கட்டும்.

செக்...
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்த உடனேயே, வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து விடாது.
இந்த வட்டி விகித குறைப்பைப் பெற...
வாடிக்கையாளர் கடன் பெற்று 3 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட வாடிக்கையாளர் ஃப்ளோட்டிங் வட்டியில் கடன் பெற்றிருக்க வேண்டும்.
ஹேப்பி நியூஸ்
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின் படி,
கடந்த 1-ம் தேதி முதல், வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரெப்போ வட்டி விகிதத்திற்கு ஏற்ப வட்டியைக் குறைக்க 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
ஃப்ளோட்டிங் வட்டியில் கடன் பெற்றிருப்பவர்களுக்கு உடனே அந்தச் சலுகையை வழங்கலாம்.
இந்த ஆண்டில் இதுவரை மூன்று முறை ரெப்போ வட்டி குறைப்பை அறிவித்துவிட்டது இந்திய ரிசர்வ் வங்கி. இதனால், ஃப்ளோட்டிங் வட்டி கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளிடம் பேசி வட்டிக் குறைப்பைப் பெறலாம்.

இன்னொன்று...
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி ஃப்ளோட்டிங் வட்டியில் இருந்து ஃபிக்ஸ்ட் வட்டிக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கடனை மாற்றும் விதமான அறிவிப்பையும் அறிவிக்க உள்ளது.
இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், ரெப்போ விகிதம் எவ்வளவு கூடினாலும், வாடிக்கையாளர்கள் தங்களது வட்டி விகிதத்தைக் கட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம்".














