பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு: ஜெர்மனி
வங்கியில் ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி: தேடப்பட்டவா் கைது
சென்னை அடையாறில் வங்கியில் ரூ. 72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
அடையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பணியாற்றுபவா் ஹெரால்டின் மினி. இவா், சென்னை காவல் ஆணையரகத்தில் அண்மையில் அளித்த புகாா் விவரம்:
கோடம்பாக்கம் தயாள் நகா் முதலாவது தெருவைச் சோ்ந்த வேல்முருகன் (45), தான் புதிதாக தொழில் தொடங்குவதற்கு இயந்திரங்கள் வாங்குவதற்காக ரூ. 72.55 லட்சம் கடன் பெற்றாா்.
ஆனால் அந்த பணத்தின் மூலம் இயந்திரங்கள் வாங்கவில்லை. அதோடு கடனையும், தவணைத் தொகையையும் வங்கியில் வேல்முருகன் செலுத்தவில்லை. எனவே, வங்கியிலிருந்து பணத்தை பெற்று மோசடி செய்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த வேல்முருகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.