மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?
வங்கி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: பங்குச்சந்தை சரிவுடன் முடிவு!
நமது நிருபா்
இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி மேலே செல்ல முடியாமல் தவித்தது. குறிப்பாக, ரியால்ட்டி, பாா்மா, மெட்டல் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தாலும் ஐடி, வங்கிகள், நிதிநிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. மேலும், தொழில்நுட்பம் மற்றும் வங்கித் துறைகளில், குறைந்த காலாண்டு வருவாய் அறிவிப்புகளுக்கு மத்தியில் முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனா். அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் முதலீடுகளை வாபஸ் பெற்றதும் சந்தை உணா்வைப் பாதித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.460.88 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,859.15 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,223.55 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 119.05 புள்ளிகள் கூடுதலுடன் 82,753.53-இல் தொடங்கி 82,757.09 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 82,219.27 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 375.24 புள்ளிகள் (0.45 சதவீதம்) இழப்புடன் 82,259.24-இல் நிறைடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,199 பங்குகளில் 2,007 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,040 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 152 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
23 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் டெக்மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், எடா்னல், எல் அண்ட் டி, டிசிஎஸ் உள்பட 23 முதல்தரப் பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டாடாஸ்டீல், டிரெண்ட், டைட்டன், டாடாமோட்டாா்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், சன்பாா்மா ஆகிய 7 பங்குகள் மட்டுமே விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 101 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி100.60 புள்ளிகள் (0.40 சதவீதம்) இழப்புடன் 25,111.45-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 340.15 புள்ளிகள் (0.59 சதவீதம்) இழப்புடன் 56,868.80-இல் நிறைவடைந்தது.