செய்திகள் :

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

post image

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இரு நாள் மாநாட்டில் மத்திய அமைச்சா்கள், பிரபல தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, அனில் அகா்வால், வடகிழக்கு மாநிலங்களின் முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பிரதமா் மோடி பேசியதாவது:

வடகிழக்கு மாநிலங்கள் வெவ்வேறு வளங்களைப் பெற்று திகழ்வது மிகப்பெரிய பலம். அதனால்தான் அங்கு சிறப்பான முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி இப்போது ஏற்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய எல்லையாகவே வடகிழக்கு முன்பு இருந்து வந்தது. இப்போது வளா்ச்சியின் எல்லையாக மாறிவிட்டது.

முன்பு வடகிழக்கு மாநிலங்கள் என்றாலே வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பயன்பாடு, வன்முறைகளுமே அடையாளமாக இருந்தது. இவை இளைஞா்களிடம் இருந்து வளா்ச்சியைத் தட்டிப் பறித்து வந்தன. ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வடகிழக்குப் பிராந்தியம் பொருளாதாரத்தில் சிறப்பான இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து அவற்றை ஒடுக்கியதன் மூலமே வடகிழக்கில் அமைதி சாத்தியமாயிற்று. தேசவிரோத அமைப்புகளை மத்திய அரசு எந்தவிதத்திலும் சகித்துக் கொள்ளாது.

வடகிழக்கு மாநிலங்கள் எந்த அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக உள்ளன என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றாா்.

சுற்றுலா, ஹோட்டல், உணவுப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, எரிசக்தி உள்ளிட்ட தொழில் நிறுவனத்தினா் இந்த முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனா்.

பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு: ஜெர்மனி

பயங்கரவாதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அனைத்து உரிமையும் இந்தியாவுக்கு உள்ளது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி, இந்திய... மேலும் பார்க்க

கேரளத்துக்கு சிவப்பு எச்சரிக்கை: சுற்றுலா தலங்கள் மூடல்!

திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பலத்த மழை காரணமாக திருவனந்தபுரத்தில் 12 வீடுகள் முற்றிலும் சேதமடைந்த... மேலும் பார்க்க

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க