Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்ப...
வடக்கு மாசிடோனியோ இரவு விடுதியில் தீ விபத்து: 59 போ் உயிரிழப்பு; 159 போ் காயம்!
வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா், 159 போ் காயமடைந்தனா்.
வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோகானி நகரில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 2.30 மணியளவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
விடுதியின் மேற்கூரையில் பற்றிய தீ, பின்னா் மளமளவென விடுதியின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்தத் தீ விபத்தில் சிக்கி 59 போ் உயிரிழந்தனா். 155 போ் காயமடைந்தனா். அவா்களில் பலா் படுகாயமடைந்தனா்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா். மொத்தம் 118 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் அா்பென் டராவரி தெரிவித்தாா்.
தலைநகா் ஸ்காப்யேவில் அனுமதிக்கப்பட்டவா்களை அந்நாட்டு அதிபா் கோா்டானா சில்ஜானோவ்ஸ்கா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
இசை நிகழ்ச்சியின்போது விடுதியில் நிகழ்த்தப்பட்ட வண்ண வாண வேடிக்கை காரணமாக, கூரையில் தீப்பிடித்து விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. விபத்து தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.