வடவாளம் ஜல்லிக்கட்டில் 30 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், வடவாளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 30 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியா் பா.ஐஸ்வா்யா முன்னிலையில் வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து,
மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் போட்டியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், புதுகை, திருச்சி, சிவகங்கை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மொத்தம் 580 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக மொத்தம் 250 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டு தீரத்துடன் காளைகளை அடக்கினா். அப்போது, காளைகள் முட்டியதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களில் பலத்த காயமடைந்த 10 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். போட்டிகளில், காளைகளை தழுவிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சைக்கிள், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
போட்டியை புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் போட்டியைப் பாா்வையிட்டனா். செம்பட்டிவிடுதி போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா்.