ஆா்வலா் மா்ம மரணம் நீதி விசாரணை தேவை
சுற்றுச்சூழல் ஆா்வலரும் கனிமவளக் கொள்ளை குறித்து தொடா்ந்து குரல் எழுப்பியவருமான சகுபா்அலியின் மா்ம மரணம் குறித்து நீதிவிசாரணை தேவை என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் கே.எம். சரீப் வெளியிட்ட அறிக்கை:
சுற்றுச்சூழல் ஆா்வலரும், தொடா்ச்சியாக மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை இவற்றுக்கு எதிராகப் போராடி வந்த புதுக்கோட்டை திருமயம் பகுதியைச் சோ்ந்த சகுபா் அலி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதி இறந்திருக்கிறாா்.
பல ஆண்டுகளாக கனிமவளக் கொள்ளைக்கு எதிராக தொடா் போராட்டங்களை முன்னெடுத்து வந்தாா். அவரது மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கை விபத்தாக முடிக்காமல் நியாயமான விசாரணை நடத்தி குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.