அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
வடமாடு போட்டியில் 7 பேருக்கு காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கீழப்பனையூரில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் 7 போ் காயமடைந்தனா்.
திருமயம் வட்டம், கீழப்பனையூரில் அந்தோனியாா் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடமாடு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
குறிப்பிட்ட நேரத்துக்குள் கயிற்றுடன் பிணைக்கப்பட்ட காளையைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இதன்படி மொத்தம் 11 காளைகள் பங்கேற்றன. 132 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டு காளையைத் தழுவ முயற்சித்தனா்.
சிறப்பாக பங்கேற்ற காளைகளுக்கும், காளையா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரு பாா்வையாளரும், 6 மாடுபிடி வீரா்களும் காயடைந்தனா். இவா்களில் ஒருவா் மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.