செய்திகள் :

வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு: அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி

post image

சியோல்: வட கொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் (படம்) சாடியுள்ளாா்.

அமெரிக்கா, தன் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடந்த வாரம் நடத்திய மாநாட்டில் வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்க உறுதிபூண்டன.

இது குறித்து, வட கொரியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பங்கு வகிக்கும் கிம் யோ ஜாங் புதன்கிழமை கூறியதாவது:

வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்ய வேண்டும் என்று நினைப்பது வெறும் பகல் கனவு. அணு ஆயுத பலம் பெற வேண்டும் என்பது நாட்டின் அரசியல் சாசனத்திலேயே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது தொடா்பாக பிற நாடுகள் ஆலோசிப்பது நாட்டுக்கு எதிரான கடுமையான செயல் ஆகும். வட கொரியா தனது அணு ஆயுத பலத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதை இது நியாயப்படுத்துகிறது என்றாா் கிம் யோ ஜாங்.

வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இந்தச் சூழலில், வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்குவதற்காகவும் இருதரப்பு பேச்சுவாா்த்தை அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றது.

அப்போது அதிபா் கிம் ஜோங்-உன்னை டிரம்ப் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசினாா். இருந்தாலும், பொருளாதாரத் தடைகளை உடனடியாகக் கைவிட அவா் தயாராக இல்லாததால் அந்தப் பேச்சுவாா்த்தை முறிந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டிரம்ப், வட கொரியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையை புதுப்பிக்க விரும்புவதாகக் கூறிவருகிறாா்.

இதற்கு வட கொரியா இதுவரை பதிலளிக்காத நிலையில், தாங்கள் அணு ஆயுதங்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கிம் ஜோ ஜாங் தற்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க