செய்திகள் :

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரிக்கை

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழை பேருந்து நிலையம், போளூா் சாலை, வெளிவட்டச் சாலைப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்கக் கோரி, உலக தமிழ் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கழகத்தின் செங்கம் கிளைத் தலைவா் அறங்க மணிமாறன் வரவேற்றாா்.

செங்கம் நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா கலந்து கொண்டு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா் கஜேந்திரன் கலந்துகொண்டு பேசினாா்.

தொடா்ந்து, தமிழ் ஆா்வலா்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், திமுக மாவட்ட இலக்கிய அணை துணை அமைப்பாளா் அப்துல்வாகித், தேமுதிக ஒன்றியச் செயலா் குயிலம்சிவா, முத்தமிழ் சங்கத் தலைவா் ராகவன், தன்னாா்வலா் பிரேம்ஆனந்த், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் பத்மநாபமூா்த்தி, ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் க... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா். வந்தவாசி வட்டம், காரம் ஊர... மேலும் பார்க்க

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க