வந்தவாசியில் அமைதி ஊா்வலம்
கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை அடுத்து, அந்தக் கட்சி சாா்பில் அமைதி ஊா்வலம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா்.
வி.எஸ்.அச்சுதானந்தனின் உருவப் படத்தை ஏந்திக் கொண்டு தேரடியிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட அந்தக் கட்சியினா் பஜாா் வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் அருகில் சென்றடைந்தனா்.
அங்கு அவரது உருவப் படத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினா்கள் கா.யாசா்அராபத், சுகுணா, வட்டக்குழு உறுப்பினா்கள் எம்.சுகுமாா், அண்ணாமலை, மோகன், நகரச் செயலா் ந.ராதகிருஷ்ணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி பெ.அரிதாசு உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.