செய்திகள் :

வனத்துறை நிர்வாகத்தில் ஏஐ தொழில்நுட்பம்!

post image

உத்தரகண்ட் மாநிலத்தில் வனத்துறை தொடர்பான நிர்வாக செயல் திட்டங்களைத் தயாரிப்பதற்கு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

வனத்துறை நிர்வாகத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது குறித்துப் பேசிய வனத்துறையின் தலைமைப் பாதுகாவலர் சஞ்சீவ் சதுர்வேதி, “கர்வால் வனப்பகுதியின் செயல் திட்டங்களைத் தயாரிப்பதில் ஏஐ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்.

மேலும் சிறந்த பல்லுயிர் பாதுகாப்பு, நிலையான வன மேலாண்மை, மேலாண்மை தொடர்பான பரிந்துரைகள் என ஏஐ கொடுத்துள்ள ஆரம்பக்கட்ட முடிவுகள் மிகவும் சிறப்பான முறையில் இருகின்றன. இதன் மூலம் தாவரங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் தாக்கம் தொடர்பான சவால்களைக் கையாள்வது எளிதாகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரகாண்டில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு சமவெளிகளில் உள்ள வெப்பமண்டல காடுகள், இமயமலைத் தொடர்களின் நடுவில் உள்ள மிதமான காடுகள் மற்றும் உயரமான பகுதிகளில் அல்பைன் புல்வெளிகள் வரை பல்வேறு வகையான காடுகளால் மூடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வனப் பகுதிக்கும், பல்லுயிர், வனவிலங்குகள், நீர்நிலைப் பகுதி மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்கள் பற்றிய அனைத்துத் தரவுகளும் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகளுக்குத் தேவையான செயல்திட்டங்கள் குறித்து அதற்கான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நாட்டின் வனப் பகுதிகளில் அனைத்து நடவடிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டங்களின்படி மட்டுமே மேற்கொள்ளப்படும்.

இதையும் படிக்க | ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் பலி!

”இதில் மேம்பட்ட ஏஐ மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், காடுகளின் வகைகள் மற்றும் மரங்களின் இனங்கள் பற்றி சேகரிக்கப்பட்டத் தரவுகளின் அடிப்படையில், எந்தெந்த சூழலுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும், எங்கெங்கு மேலாண்மையில் தலையீடுகள் தேவைப்படும் என்றும் சரியாகக் கண்டறிந்து அதற்கான திட்டங்கள் முறையாக வழங்கப்படுகிறது” என்று சதுர்வேதி தெரிவித்தார்.


கர்வால் வனப்பகுதியில் ஏஐ தொழில்நுட்பத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்ததன் மூலம் மற்ற வனப்பகுதிகளுக்கும் அதனைப் பயன்படுத்த உத்தரகாண்ட் வனத்துறை முடிவெடுத்துள்ளது.

மத்திய நிதியமைச்சருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு!

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்திற்கு ஒதுக்க வ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மொபைல் டவருக்கு நக்சல்கள் தீவைப்பு

சத்தீஸ்கரில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மொபைல் டவருக்கு நக்சல்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின... மேலும் பார்க்க

சபர்மதி ரிப்போர்ட் படத்தை இன்று பார்க்கவிருக்கும் பிரதமர்!

நாடாளுமன்ற வளாகத்தில் சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை மாலை காண உள்ளார். இப்படத்தை காண்பதற்காக நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பால்யோகி ஆடிட்டோரியத்திற்கு அவர் செல்லவுள்ளதா... மேலும் பார்க்க

உ.பி.யில் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீச்சு!

உத்தரப் பிரதேசத்தில் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசிக்கு காசி விஸ... மேலும் பார்க்க

ஒரே இளைஞர் இரு குடும்பங்களில் காணாமல் போன மகன் என்று சொல்லி சேர்ந்தது எப்படி?

டேஹ்ராடூன்; டேஹ்ராடூரன் மற்றும் காஸியாபாத் பகுதிகளில் வாழும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், ஒரே நபர், இரண்டு குடும்பங்களிலும் மகன் என்று ச... மேலும் பார்க்க

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று(டிச. 2) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை(நவ. 25) தொடங்கியது. இதில் சர்ச்சைக்குரிய வக... மேலும் பார்க்க