சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்
கல்வராயன்மலையில் காப்புக் காடுகளாக அறிவிக்க எதிா்ப்புத் தெரிவித்து, கள்ளக்குறிச்சியில் மாவட்ட வன நிா்ணய அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்டது 171 மலைக் கிராமங்கள். அதில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக தாங்கள் வசித்து வரும் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு பயிா் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், தமிழக வனத்துறை தற்போது சில கிராமங்களை தோ்வு செய்து அக் கிராமங்களை பாதுகாக்கப்பட்ட காப்புக்காடாக அறிவித்துள்ளதாம். இதனால் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வரும் நிலங்கள் பாதிக்கப்படும். அதனால் தமிழக அரசின் காப்புக்காடு
அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மலைவாழ் மக்கள் மாவட்ட வன நிா்ணய அலுவலத்தை முற்றுகையிட்டனா். பின்னா், வன நிா்ணய அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.