செய்திகள் :

வயநாடு இடைத்தேர்தல்: இதுவரை இல்லாத அளவு சரிந்த வாக்கு சதவிகிதம் - குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

post image

கேரள மாநிலத்தில் வயநாடு நாடாளுமன்ற தொகுதி, சேலக்கரை, பாலக்காடு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் நவம்பர் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பாலக்காட்டில் பிரசித்திபெற்ற கல்பாத்தி விழா நடைபெறுவதால் தேர்தல் வரும் 20-ம் தேதிக்கு மாற்றிவைக்கப்படுள்ளது.  வயநாடு நாடாளுமன்ற தொகுதி மற்றும் சேலக்கரை சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

பிரியங்கா காந்தி முதல் முதலாக தேர்தலில் போட்டியிடுவதால் வயநாடு தொகுதி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தியும், பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், சி.பி.ஐ வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். பிரியங்காவுக்காக ராகுலும், சத்யன் மொகேரிக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயனும், நவ்யா ஹரிதாசை ஆதரித்து மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி-யும் பிரசாரம் செய்தனர். வயநாட்டில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

வயநாட்டில் நடந்த வாக்குப்பதிவு

வயநாடு நிலச்சரிவு நடந்த முண்டகை, சூரல்மலை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாற்று இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மேப்பாடி அரசு மேனிலைப் பள்ளியில் வாக்களிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணின் வாக்கை ஆள் மாறாட்டம் செய்து வேறு யாரோ செலுத்தியுள்ளனர். அவரது வாக்கை தவறுதலாக யாரோ செலுத்தியுள்ளதாகவும், அந்த பெண்ணுக்கு வேறு வாக்களிக்க ஏற்பாடு செய்தும் அவர் சம்மதிக்கவில்லை என வாக்குப்பதிவு மையத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

சேலக்கரை சட்டசபை இடைத்தேர்தலில் 72.77 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. அதே சமயம் வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 64.72 சதவிகிதம் வாக்குகளே பதிவாகின. வயநாடு இடைத் தேர்தலில் சமீபகாலங்களில் இல்லாத அளவில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் 74.86 சதவீதமும், 2014 தேர்தலில் 73.2 சதவிகிதமும், 2019-ல் 80.33 சதவிகிதமும், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 72.92 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 64.72 சதவிகிதம் வாக்குகளே பதிவாகியுள்ளது அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரியங்கா காந்தி

வயநாடு தொகுதியில் கடந்த 2019 பொதுத்தேர்தலில் ராகுல் காந்தி 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி 3,64,422 வக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரியங்கா முதன் முதலாக தேர்தலில் போட்டியிடுவதால் இந்த இடைத்தேர்தலில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறவைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் டெல்லி தலைமைக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆனால், வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்ததால் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் குறையலாம் என காங்கிரஸ் கட்சியினர் கருதுகிறார்களாம். நிலச்சரிவு பேரிடருக்கு பின்னர் பல்வேறு மக்கள் இடம் பெயர்ந்தது வாக்கு சதவிகிதம் குறைந்ததுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் இடைத்தேர்தல்களில் வாக்கு சதவிகிதம் குறைவது வழக்கமானது தான் என்ற கருத்தும் நிலவுகிறது.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

DMK: 'திமுக-வுக்கு மீண்டும் தலைவலி ஆகிறதா மகளிர் உரிமைத் தொகை?' - தொடரும் குழப்பங்களும் கேள்விகளும்!

சமீபத்தில் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "மகளிருக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய... மேலும் பார்க்க

The Guardian: 'இனி எக்ஸ் தளத்தில் செய்திகளைப் பகிர மாட்டோம்'; கார்டியனின் அறிவிப்புக்குக் காரணமென்ன?

1821ஆம் ஆண்டு லண்டனில் 'மான்செஸ்டர் கார்டியன்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ், பின்னர் 1959ஆம் ஆண்டு 'தி கார்டியன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது வெளிவந்துகொண்டிருக்கிறது.203 ஆண்டுகள் பழமைவ... மேலும் பார்க்க

மதுரை: தொடரும் முல்லை நகர் மக்களின் போராட்டம்; தலைமைச் செயலாளருக்கு சு.வெங்கடேசன் அவசரக் கடிதம்

மதுரை பீபிகுளம் முல்லை நகரில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி வீடுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தயாராகி வரும் நிலையில், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து போரா... மேலும் பார்க்க

கலக்கத்தில் சீனியர் புள்ளி முதல் அதிரடிக்குக் காத்திருக்கும் அதிமுக வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கலக்கத்தில் சீனியர் புள்ளி!காய்ச்சி எடுத்த தலைமை...சமீபத்தில் தென்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதன்மையானவர், நிர்வாகிகள் மட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்... மேலும் பார்க்க

Martin : லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை மற்றும் கோவையில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை துடியலூர் வெள்ளை ... மேலும் பார்க்க

Wayanad: `வாக்களிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை'- வாக்குப்பதிவு சரிவு குறித்து பாஜக வேட்பாளர்

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு தொகுதியில் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைவ... மேலும் பார்க்க