செய்திகள் :

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

post image

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.

சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது களத்திங்கல் நௌஃபல் என்ற இளைஞரின் கதை.

உலகை உலுக்கிய வயநாடு நிலச்சரிவில், தன்னுடைய குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர் நௌஃபல், நொறுங்கி நிலைகுலைந்தவர்களுக்கு மீண்டெழுவதன் முன்னோடியாக மாறியிருக்கிறார்.

சமுதாயம் அளித்திருக்கும் ஆதரவோடு, வயநாடு நிலச்சரிவின் நினைவாக ஒரு உணவகம் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய வீட்டைப் புதுப்பித்துக் கொண்டார். புதிய காதலைத் தேடிக்கண்டைந்துள்ளார். இருண்டுபோன வாழ்விலும் ஒளியைத் தேடும் வழியைக் கண்டுபிடித்து அடுத்த நிலைக்கு நகர்ந்துள்ளார் நௌபால்.

கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில், வயநாடு மாவட்டம் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டு, மக்கள் குடியிருந்தப் பகுதிகளை சூறையாடிச் சென்றது. இதில், நௌஃபாலின் குடும்பத்தில் அவரது மனைவி, மூன்று பிள்ளைகள் உள்பட 11 பேர் பலியாகினர்.

இந்த நிலச்சரிவு வயநாட்டை மட்டுமல்லாமல், பலரையும் போல நௌஃபாலின் வாழ்க்கையையும் அடியோடுப் புரட்டிப்போட்டது. இந்த சம்பவம் நடந்தபோது, நௌஃபல் ஓமனில், உணவகம் ஒன்றில் சமையலராகப் பணியாற்றி வந்தார். வயநாடு நிலச்சரிவு குறித்து செய்தியறிந்ததும் விரைந்து இந்தியா வந்த அவர் தன்னுடைய வீடு இருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு வேறொன்றுமில்லை.. வெறும் இடிபாடுகள்தான்.

இவ்வளவுப் பெரிய இழப்பையும் சந்தித்த நௌஃபல், நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. தன்னைத் தானே தேற்றிக்கொண்டு, தனது வாழ்வை மீண்டும் கட்டமைக்க முயன்றார். தற்காலிகமாக ஒரு வீட்டில் தங்கினார். தனது காயத்துக்கு தானே மருந்தாக மாறினார்.

இந்த நிலையில்தான், கேரளத்தில் இயங்கி வரும் நட்வத்துல் முஜாகிதீன் என்ற முஸ்லிம் சமுதாய அமைப்பு, இவருக்கு ரூ.7 லட்சம் நிதித் திரட்டிக் கொடுத்தது. இதைக் கொண்டு அவர் ஏதேனும் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள முடிவெடுத்தார்.

அப்போதுதான், தனது மனைவி சஜ்னாவின் ஆசை நினைவுக்கு வந்தது. தனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஜூலை 30ஆம் தேதியை நினைவுபடுத்தும் வகையில் ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். தனது மனைவியின் ஆசையையும் நிறைவேற்றினார்.

பலரும், இந்த பெயருக்கு எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தபோதும், அவர் அதனை ஏற்கவில்லை. இந்த நாள்தான், மக்களின் உள்ளங்களில் கருணையைப் பொழியவைத்தது, மக்கள் கடவுளுக்கு நெருக்கமாக மாறினார்கள் என நம்பினார்.

இப்போது, ஓமனில் இருந்தும் ஓர் ஆதரவுக் கரம் நீண்டது. அங்குள்ள கேரள முஸ்லிம் கலாசார மையம் அவருக்கு ஒரு நிலத்தை வாங்கி அங்கு வீட்டைக் கட்டி, அதன் சாவி அண்மையில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆதரவின்றி இருந்த நௌஃபாலுக்கு பலரும் உதவி செய்தபோது அவருக்கு வாழ்க்கையும் கொஞ்சம் கருணை காட்டியது. சாஃப்னா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இது பற்றி நௌஃபல் கூறுகையில், வயநாடு நிலச்சரிவின்போது நிர்கதியான எனக்கு பலரும் உதவ முன்வந்தனர். முன்பின் தெரியாதவர்கள் கூட. இது கேரளாவில் மட்டுமே சாத்தியம் என நான் நினைத்தேன். எங்கு மனித நேயமும், மக்கள் சமுதாயமும் ஒற்றுமையாக பலமாக இருக்கிறதோ அங்கு இந்த மாற்றம் நிகழும். இந்த பேரழிவில் அனைத்தையும் இழந்தவர்களுக்கு ஒரு உத்வேகமாக நௌஃபல் வாழ்க்கை மாறியிருக்கிறது.

Naufal, who lost his entire life in the Wayanad landslide, has confidently started a restaurant. Its name is July 30.

இதையும் படிக்க.. 280 கிராம்.. 21 வாரத்தில் பிறந்த குழந்தை! கின்னஸ் சாதனையுடன் முதல் பிறந்தநாள்!!

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேற... மேலும் பார்க்க

பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்

‘பிகாா் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீா்குலைந்துள்ள நிலையில், முதல்வா் நீதீஷ் குமாா் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக்ஜன சக்தி ... மேலும் பார்க்க