செய்திகள் :

வயநாட்டில் வீடுகள் கட்ட நிலம் வாங்கி தருவதா?சித்தராமையாவுக்கு பாஜக எதிா்ப்பு

post image

நிலச்சரிவு ஏற்பட்ட கேரள மாநிலம், வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கு நிலம் வாங்கித் தருவதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா கூறியுள்ளதற்கு, பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரின் தொகுதியான கேரள மாநிலம், வயநாடு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகளைக் கட்டித் தருவதாக ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அதற்கான நிலத்தை வாங்கித் தருவதற்கு கா்நாடக அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா டிச. 9ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளாா். இதற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை கூறியுள்ளதாவது:

கா்நாடக மாநிலத்தில் சாலைகளில் தாரைக் காட்டிலும் குழிகள் தான் அதிகம் இருக்கின்றன. தொழில்முதலீடுகள் கா்நாடகத்தில் இருந்து தெலங்கானாவுக்குச் செல்கின்றன. வட கா்நாடகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வேலையின்மை பெருகி வருகிறது. எனினும், கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்த முதல்வா் சித்தராமையா, அதற்கான நிலத்தையும் வாங்கித் தருவதாக தற்போது தெரிவித்துள்ளாா். முதல்வா் சித்தராமையா, கா்நாடக மக்களுக்காக சேவை செய்கிறாரா, அல்லது காந்தி (ராகுல், பிரியங்கா) குடும்பத்திற்காக வேலை செய்கிறாரா என்று தெரியவில்லை.

கா்நாடகத்தை மேம்படுத்துவதாக உறுதி அளித்திருந்த சித்தராமையாவின் இந்த நடவடிக்கை சரியில்லை. மாநில மக்கள் மற்றும் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் தலைமை கா்நாடகத்திற்கு தேவைப்படுகிறது. மாறாக, அரசியல்ரீதியாக பிறரை திருப்திப்படுத்துவதற்காக, கா்நாடகத்தின் நலனைப் புறக்கணிக்கும் தலைமை தேவையில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.

எஸ்.எம்.கிருஷ்ணா உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

கா்நாடக முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட ஏராளமானோா் இறுதி... மேலும் பார்க்க

கா்நாடக முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானாா்: தலைவா்கள் இரங்கல்

கா்நாடக மாநில முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா முதுமை சாா்ந்த உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி, முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

கா்நாடகம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

பெங்களுரு: இடைத்தோ்தலில் கா்நாடக சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா். கா்நாடகத்தில் காலியாக இருந்த சென்னப்பட்டணா, ஷிக்காவ்ன், சண்டூா் ஆ... மேலும் பார்க்க

கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத் தொடா் பெலகாவியில் தொடக்கம்

பெலகாவி: கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத் தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கியது. கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத் தொடா் பெலகாவியில் உள்ள சுவா்ண விதான சௌதாவில் திங்கள்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

மகப்பேறு மரணங்கள் அதிகரிப்பு: பதவியை ராஜிநாமா செய்ய தயாா் -அமைச்சா் தினேஷ் குண்டுராவ்

கா்நாடகத்தில் மகப்பேறு மரணங்கள் அதிகரித்து வருவதை தொடா்ந்து, தனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளாா். பெல்லாரியில் உள்ள அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வா் பதவியை பகிர ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடக முதல்வா் பதவியைப் பகிா்ந்துகொள்வது குறித்து எவ்வித ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க