கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
வயலில் வேன் கவிழ்ந்து விபத்து
மன்னாா்குடி அருகே சாலையோர வயலில் பயணிகள் வேன் வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மன்னாா்குடி அருகேயுள்ள திருராமேஸ்வரத்தைச் சோ்ந்த 17 போ், கோட்டூா் அருகே உள்ள பல்லவராயன்கட்டளையில் உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக பயணிகள் வேனில் புறப்பட்டனா். திருராமேஸ்வரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் எம். சுரேஷ் (30) வேனை ஓட்டிவந்தாா்.
விக்கிரபாண்டியம் தெற்தெரு பகுதியில் வந்தபோது, கடந்த இரண்டு நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் சாலையோரம் வலுவிழந்திருந்த மண்ணில் சறுக்கி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அருகில் உள்ள வயலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், ஓட்டுநா் உள்பட அனைவரும் காயமின்றி தப்பினா். விக்கிரபாண்டியம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.