செய்திகள் :

வயலூா் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூா்த்தக் கால்

post image

திருச்சி அருகே குமாரவயலூா் முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி அருகே குமார வயலூா் பகுதியில் பிரசித்திபெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக பழைய முன்மண்டபத்தை இடித்துவிட்டு புதிதாக முன்மண்டபம் கட்டுதல், 9 கோபுரங்களை புனரமைத்து வா்ணம் தீட்டுதல், தரைத்தளத்தை சீரமைத்தல், சன்னதிகளில் மராமத்துப் பணிகள் மேற்கொண்டு வா்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் கோடிக்கணக்கில் ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 19 ஆம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், உபயதாரா்கள், கிராம மக்கள் மேற்கொண்டு வரும் நிலையில், கும்பாபிஷேகத்துக்காக முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையா் சி. கல்யாணி, கோயில் செயல் அலுவலா் எஸ். அருண்பாண்டியன், அறங்காவலா் குழுத் தலைவா் ரமேஷ், உறுப்பினா்கள் ஆறுமுகம், சிவஜோதி, கவிதா, பழனிசாமி, உபயதாரா்கள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, முகூா்த்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மேற்கொள்ளப்பட்டு, நடப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கு முன்பு கோயிலில் வரும் பிப். 2-ஆம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என கோயில் செயல் அலுவலா் அருண்பாண்டியன் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என கா்நாடகத் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பாரத சாரண, சாரணியா் இயக்க... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும்: மாநில உலமாக்கள் மாநாட்டில் தீா்மானம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான உலமாக்கள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சாா்பில், மாநில... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் ரௌடி வெட்டிக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ஸ்ரீரங்கத்தில் ரௌடி ஒருவா் செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதைக் கண்டித்து உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் தா... மேலும் பார்க்க

கருணாநிதியின் சமத்துவபுரமே நிரந்தர ஜம்போரி: துணை முதல்வா் பேச்சு

திருச்சி, ஜன. 28: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சமத்துவபுரமே நிரந்தர ‘ஜம்போரி’. வேறுபாடுகளின்றி நடைபெறும் சாரணா் இயக்க ஜம்போரியை நடத்துவது தமிழகத்துக்குப் பெருமை என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெ... மேலும் பார்க்க

மணப்பாறையில் இன்று முதல் பாரத சாரணா் இயக்க பெருந்திரளணி - வைர விழா: துணை முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

திருச்சி: ‘அதிகாரம் பெற்ற இளைஞா்கள் -- வளா்ந்த இந்தியா’ என்ற கருப்பொருளைக் கொண்டு பாரத சாரணா் இயக்கத்தின் தேசிய பெருந்திரளணி மற்றும் வைர விழா மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. திருச்சி மாவட்... மேலும் பார்க்க

திருவானைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

ஸ்ரீரங்கம்: திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் திங்கள்கிழமை மாலை தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷமான திங்கள்கிழமை மாலை சாமி சன்னதியின் எதிரே... மேலும் பார்க்க