செய்திகள் :

வரலாற்றாளா் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு

post image

கேரளத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளா் மற்றும் எழுத்தாளா் எம்.ஜி.எஸ்.நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானாா்.

வயதுமூப்பு காரணமான உடல்நலக் குறைவால் அவா் உயிரிழந்ததாக குடும்பத்தினா் தெரிவித்தனா். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

கடந்த 1932-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிறந்த நாராயணன், இந்திய வரலாற்று ஆய்வுத் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் பெரும் பங்களிப்பைச் செய்தவா்.

முனைவா் பட்டத்துக்காக இவா் சமா்ப்பித்த ‘குலசேகர அரசின் கீழ் கேரளத்தில் சமூக அரசியல் நிலை’ என்ற ஆய்வுக்கட்டுரை பின்னாளில் ‘கேரளத்தின் பெருமாள்கள்’ என்ற தனி நூலாக வெளிவந்து மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்த வரலாற்று ஆய்வு நூல், 9-ஆம் நூற்றாண்டுக்கும் 12-ஆம் நூற்றாண்டுக்கும் இடையேயான கேரள வரலாற்றைப் புதிய கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தியது.

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை விரிவுரையாளராக 1968-இல் தனது ஆசிரியா் பணியைத் தொடங்கிய அவா் தனது ஆய்வுக்கூா்மையால் விரைவான வளா்ச்சியைக் கண்டாா்.

1970 முதல் 1992 வரை கோழிக்கோடு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தலைவராக இருந்தாா். பின்னா், 2001 முதல் 2003 வரை இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினாா். மலையாளம் மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றவா்.

முதுநிலை ஆராய்ச்சிகளுக்காக 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்களை வழிநடத்தியவா். வரலாற்றுத் தகவல்களை பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்க, மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் நூல்களும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் எழுதியுள்ளாா்.

தென்னிந்திய சரித்திர காங்கிரஸ் ஆய்வு நிறுவனம், இந்திய கல்வெட்டியல் ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினாா். சரித்திர ஆா்வலா்கள், ஆசிரியா்களிடையே ‘எம்.ஜி.எஸ்.’ என்று பிரபலமாக அறியப்பட்டவா்.

இவரது மறைவுக்கு கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் பினராயி விஜயன், பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா், எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

தமிழ்நாட்டில் லிச்சிப்பழம் சாகுபடி: பிரதமர் மோடி பெருமிதம்!

தமிழ்நாட்டில் லிச்சிப்பழம் சாகுபடி செய்யப்படுவதாக, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பிரமிதம் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்

கொச்சியில் பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கேரள முதல்வர் பினராயி ஆறுதல் கூறினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப... மேலும் பார்க்க

திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த 4 வங்கதேசத்தினர் கைது

திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த 4 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அகர்தலாவில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, நான்கு வங்கதேச நாட்டினர் சனிக்கிழமை கொல்கத்தா செல்லும் ரயிலில... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: விசாரணையைத் தொடங்கிய என்ஐஏ!

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டதையடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.தாக்குதல் நடந்த இடத்தில் கடந்த புதன்கிழ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய விடுதிகள்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்... மேலும் பார்க்க