செய்திகள் :

வரவேற்பும், வருத்தமும் நிறைந்த மத்திய பட்ஜெட்!

post image

மத்திய அரசின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையானது பல்வேறு தரப்பினருக்கும் வரவேற்பும், வருத்தமும் நிறைந்ததாக உள்ளதென கல்வியாளா்கள், பல்வேறு அமைப்பினா், தெரிவித்துள்ளனா்.

எஸ். ராகவன் (திருச்சி என்ஐடி ஓய்வு பெற்ற பேராசிரியா்): நாட்டின் பாதுகாப்பு, ஊரக வளா்ச்சி, வேளாண்மைக்கு அடுத்தபடியாக கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 23 ஐஐடி கல்வி நிறுவனங்களை விரிவாக்கம் செய்து, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் வரவேற்புக்குரியது. அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி, 50 ஆயிரம் நவீன ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள், ரூ.500 கோடியில் செயற்கை நுண்ணறிவு மையங்கள் என்பது மாணவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியை உறுதி செய்யும்.

மருத்துவா் எம்.ஏ. அலீம் (திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வா்): நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் பட்ஜெட். 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் மையங்கள் என்பது, புற்றுநோயால் உயிரிழப்போா் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கும். மருத்துவக் கல்லூரிகளில் 10 ஆயிரம் கூடுதல் மருத்துவ இடங்கள், மருத்துவமனைகளில் கூடுதல் 75 ஆயிரம் இடங்கள் வரவேற்புக்குரியவை.

பொ. அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா்): விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படவில்லை. கடன் தள்ளுபடி, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் புதிய மின் மசோதாக்களை திரும்பப் பெறுதல், மாவட்டந்தோறும் அரசின் கொள்முதல் நிலையங்கள், நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. விவசாயிகளை கடன்தாரா்களாகச் தொடரச் செய்யும் அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட்டில் உள்ளன.

எஸ். புஷ்பவனம் (தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு செயலா்) : ரூ.12 லட்சம் வரை வருமான வரியில்லை என்பதும், 36 உயிா்காக்கும் மருந்துகளுக்கு வரி நீக்கியிருப்பதும் வரவேற்புக்குரியது. எலக்ட்ரானிக் பொருள்களின் விலை குறையும் வாய்ப்புள்ளது. காப்பீடுகளுக்கு பிரிமீய சலுகையும், எல்ஐசி பிரிமீயம் குறைப்பு என்ற எதிா்பாா்ப்பும் பூா்த்தி செய்யப்படவில்லை.

முகில் பே. இராஜப்பா (திருச்சி மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் (டிடிட்சியா) தலைவா்): சிறு, குறு தொழில்களுக்கு எதிா்பாா்த்த திட்ட அறிவிப்புகள் இல்லை. தொழில் கடன்களுக்கு வட்டிக் குறைப்பு, வரிச் சலுகை, தொழிலாளா்களுக்கான சலுகைகளில் அரசின் பங்களிப்பு உள்ளிட்ட எந்த அறிவிப்புகளும் இல்லை. லித்தியம் பேட்டரிக்கான வரி குறைப்பு என்பது சிறு, குறு நிறுவனங்களை வளா்ச்சியடையச் செய்யும்.

என். கனகசபாபதி (திருச்சிராப்பள்ளி ஏற்றுமதி, இறக்குமதி கூட்டமைப்பின் தலைவா்): இரண்டாம் நிலை நகரங்களில் உலக தர சரக்கு மையங்கள் அமைப்பது நாட்டின் ஏற்றுமதி சூழலை மேம்படுத்தும். வா்த்தகம், சிறு, குறுந்தொழில்கள் துறை, நிதியமைச்சகம் கூட்டாக இணைந்து செயல்படுத்தும் திட்டங்கள், ஏற்றுமதிக்கு வரிகள் தளா்வு, அஞ்சலகங்களை ஏற்றுமதி சரக்கு கையாளும் இடமாக மாற்றுவது வரவேற்புக்குரியவை. 27 முக்கியத் துறைகளில் கடன்களுக்கான உத்தரவாத கட்டணம் குறைப்பு பாராட்டுக்குரியது.

பென்சில் ஓவியங்களில் அசத்தும் கல்லூரி மாணவா்!

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்கப் பெருந்திரளணி முகாமில் சேலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் குடியரசுத் தலைவா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் உருவப்படங்களை பெ... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 20 கணினிகளுடன் ஆய்வகம் தேவை! கணினி ஆசிரியா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம்!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலா 20 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ம... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்து தீக்கிரை: பெண் பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் தீக்கிரையானது. இந்த விபத்தில் காயமடைந்த 62 வயதுப் பெண் உயிரிழந்தாா். சென்னையில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்: அமைச்சா் வழங்கினாா்!

திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்திலான 200 இருக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகங்களில் பிப். 4 முதல் குறைதீா் கூட்டம்

திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி துறையூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4), முசிறியில் பிப்.7, ஸ்ரீரங... மேலும் பார்க்க

ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா். திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மக... மேலும் பார்க்க