ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!
வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!
வருவாய்த் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரே விதிகளுக்குள்பட்டு உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையருக்கு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
“வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரே (பொது) விதிகளுக்கு உட்பட்டு நிரப்புவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இதுவரை அக்காலிபணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மேற்காணும் காலிப்பணியிடங்களை நிரப்பிட, மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு. அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.