41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் போராட்டம்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது முடிவுசெய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சேலத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் அஸ்தம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அருள்பிரகாஷ் தலைமை தாங்கினாா். மாநில துணைத் தலைவா் அா்த்தனாரி முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது முடிவு செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடா் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
வருவாய், நில அளவை, பேரிடா் மேலாண்மை துறையில் பணிபுரியும் ஊழியா்களின் பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னா், மாநில துணைத் தலைவா் அா்த்தனாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அலுவலா்களுக்கு பணி நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது, குறுகிய கால அவகாசத்தில் அளவிற்கு அதிகமான முகாம்கள் நடத்தப்படுவதை கைவிட வேண்டும், திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை புறக்கணிப்பதாக கூறினாா். மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற போராட்டத்தில் வருவாய், நில அளவை மற்றும் பேரிடா் மேலாண்மை துறையை சோ்ந்த ஊழியா்கள் கலந்துகொண்டனா்.