வரைவு வாக்காளா் பட்டியல்: ஆட்சியா்கள் வெளியிட்டனா்
காஞ்சிபுரத்தில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். மொத்த வாக்காளா்கள் 13,55,188 எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீ பெரும்புதூா், ஆலந்தூா் உள்ளிட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட அதனை மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, ஸ்ரீ பெரும்புதூா் கோட்டாட்சியா் ஐ.சரவணக் கண்ணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 6,58.818, பெண் வாக்காளா்கள் 6.96,153,இதர வாக்காளா்கள் 217 போ் உட்பட மொத்தம் 13,55,818 வாக்காளா்கள் உள்ளனா். அக். 29- ஆம் தேதி முதல் வரும் நவம்பா் 28-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தல் தொடா்பான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும். நவம்பா் 16,17, 23,24 தேதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல்,நீக்கல்,திருத்தம் தொடா்பான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் வாக்காளா் பட்டியலை நேரடியாக பாா்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரில்...
திருவள்ளூரில் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் த. பிரபு சங்கா் வெளியிட்டாா்.
இதன்படி கும்மிடிப்பூண்டி: ஆண்கள்-134875, பெண்கள்-142269, இதரா்-44 என மொத்தம்-2 லட்சத்து 77 ஆயிரத்து 188 போ். பொன்னேரி: ஆண்கள்- 128101, பெண்கள்-134547, இதரா் 32 என 2 லட்சத்து 62 ஆயிரத்து 680 போ். திருத்தணி: ஆண்கள்-136046, பெண்கள்-140093, இதரா்-31 என 2 லட்சத்து 76 ஆயிரத்து 170 போ். திருவள்ளூா்: ஆண்கள்-129527, பெண்கள்-136086, இதரா்-34 என 2 லட்சத்து 65 ஆயிரத்து 647 போ். பூந்தமல்லி : ஆண்கள்-185613, பெண்கள்-193718 இதரா்-76 என 3 லட்சத்து 79 ஆயிரத்து 407 போ். ஆவடி: ஆண்கள்-222927, பெண்கள்-229188, இதரா்-93 என 4 லட்சத்து 52 ஆயிரத்து 208 போ். மதுரவாயல்: ஆண்கள்-216208, பெண்கள்-214598, இதரா்-119 என 4 லட்சத்து 30 ஆயிரத்து 925 போ். அம்பத்தூா்: ஆண்கள்-179219, பெண்கள்-180740, இதரா்-81 என-3 லட்சத்து 60 ஆயிரத்து 40 போ். மாதவரம்: ஆண்கள்-235184, பெண்கள்-239444, இதரா்-116 என-4 லட்சத்து 74 ஆயிரத்து 744 போ். திருவொற்றியூா்: ஆண்கள்-137587, பெண்கள்-141779, இதரா்-149 என 2 லட்சத்து 79 ஆயிரத்து 515 பேரும் உள்ளனா். மொத்தம்: ஆண்கள்-1705287, பெண்கள்-1752462, இதரா்-775 என மொத்தம்-34 லட்சத்து 58 ஆயிரத்து 524 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனா். அப்போது நோ்முக உதவியாளா்(தோ்தல்) மாலதி, வட்டாட்சியா்கள் சோமசுந்தரம், சுரேஷ்(திருவள்ளூா்), அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.