செய்திகள் :

வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!

post image

மும்பை: அமெரிக்க எச்-1பி விசா கட்டணங்கள் கடுமையாக உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில், ஐடி மற்றும் ப்ளூ-சிப் தனியார் வங்கி பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததாலும், அதே வேளையில் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்று உயர்ந்து பிறகு சரிவுடன் முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், லாபம் மற்றும் இழப்புகளுக்கு இடையில் ஊசலாடிய பிறகு சென்செக்ஸ் அதிகபட்சமாக 82,370.38 புள்ளிகளுடனும் குறைந்தபட்சமாக 81,776.53 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 57.87 புள்ளிகள் குறைந்து 82,102.10 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 32.85 புள்ளிகள் சரிந்து 25,169.50 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், ட்ரெண்ட் மற்றும் சன் பார்மா ஆகியவை சரிந்தும் மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன. இருப்பினும், ஆட்டோ மற்றும் பொதுத்துறை வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் இழப்பு குறைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இன்றைய பங்குச் சந்தையில் 3,136 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,329 பங்குகள் உயர்ந்தும் 1,714 பங்குகள் சரிந்தும் 93 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

எச்1பி விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து, புதிய விண்ணப்பதாரர்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதும், கட்டண அச்சுறுத்தல்கள் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் நம்பிக்கைகளை பலவீனமாக்கியதால் நிஃப்டி ஐடி குறியீட்டில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.2,910.09 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசிய சந்தைகளில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சற்றே சரிந்த நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி உயர்ந்து முடிவடைந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று உயர்ந்து முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.60 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $66.17 ஆக உள்ளது.

இதையும் படிக்க: டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் என்னென்ன துறைகளுக்கு அதிக பாதிப்பு?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.88.75ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், அமெரிக்க எச்-1பி விசா கட்டணம் கடுமையாக உயர்ந்ததன் பின்னணியில், இந்திய ஐடி சேவைகள் ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படு... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் குழுவில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிவிடப்படும் தகவல்களை தவறவிடுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய சோதனையில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது. இதன்படி, அனைவரையும் குறிப்பிட்டுப் பதிவிடப்படும் வாட... மேலும் பார்க்க

ஒரே நாளில் 2 முறை விலையுயர்ந்த தங்கம்: மக்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கம் விலை நேற்று போல் இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. அந்தவக... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் என்னென்ன துறைகளுக்கு அதிக பாதிப்பு?

இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பால் வேளாண்மை, எரிசக்தி, ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என்று ... மேலும் பார்க்க

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தகம்!

புதுதில்லி: தீபாவளி பண்டிகையைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தக நடைபெறும் என்று தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) தெரிவித்துள்ளது. வர்த்தகமானது மதியம் 1:45 மணி தொடங்கி 2... மேலும் பார்க்க

சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!

புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவிற்கு, ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது, மே மாதத்தில் 229 கோடி அமெரிக்க டாலர்களிலிருந்து, ஆகஸ்ட் மாதம் 9.648 கோடி அமெரிக்க டாலராக, அதாவது 58 சதவிகிதம்... மேலும் பார்க்க